மேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு இன்று (26) காலை முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பழுபார்ப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
அதன்படி இன்று காலை 9.00 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.
களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொறொந்துடுவ மற்றும் பொம்புவல ஆகிய பகுதிகள் நீர் வெட்டினால் பாதிக்கப்படும்.