கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் மின் கம்பிகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவியை நாட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் பாவனையாளர்களினால் அறுக்கப்பட்ட மின் கம்பிகள் தொடர்பில் அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் மின்கம்பிகள் அறுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ள போதிலும், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீண்டும் இரவு வேளைகளில் இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வீதியைப் பயன்படுத்தும் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.