கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இங்கிலாந்தின் இப்ஸ்விச் பாதுகாப்பு ஊழியருடனான மோதலைத் தொடர்ந்து மேதியஸ் குன்ஹாவுக்கு கால்பந்து சங்கம் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது.
பிரேசில் ஸ்ட்ரைக்கர் மேதியஸ் குன்ஹா, இப்ஸ்விச் பாதுகாப்பு ஊழியரின் முகத்தில் இருந்து கண்ணாடியைப் பிடுங்குவதற்கு முன்பு அவரை முழங்கையால் தாக்கியுள்ளார்.
இதனால், தவறான நடத்தைக்காக கால்பந்து சங்கத்தால் குற்றம் சாட்டப்பட்ட குன்ஹாவுக்கு இரு போட்டித் தடைகளுக்கு மேலதிகமாக 80,000 பவுண்ட்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, 25 வயதான குன்ஹா லீசெஸ்டர் சிட்டி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கு எதிரான வெற்றிகளில் கோல் அடித்தார்.
மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை டோட்டன்ஹாமில் 2-2 என்ற கோல் கணக்கில் வால்வ்ஸ் அணியை சமன் செய்ய உதவினார்.
இந்த பருவத்துக்கான 19 பிரீமியர் லீக் ஆட்டங்களில் வோல்வ்ஸ் \அணிக்காக 10 கோல்களை குன்ஹா அடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.