மில்லனிய பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனியை (Raveendra Nammuni) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சிஐடி) கைது செய்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களைப் பகிர்ந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படகோடாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் இன்று (03) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.