முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன இன்று (08) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும்.
கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயவர்தன, 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலுடன் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தார்.