அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டது.
மருதானார்மடம், சுன்னாகம் பகுதிகளிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்தில் பொதுமக்கள், சந்தை வியாபாரிகள் என பலரும் கலந்துகொண்டு, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துக்களை பதிவு செய்தனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு தலைவர் மாவை சேனாதிராஜாவும் தனது கையொப்பத்தை இதன்போது பதிவு செய்திருந்தார்.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் கடந்த 7 நாட்களாக வடக்கின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.