2025 சாம்பியன்ஸ் டிராபியில் பெப்ரவரி 21 அன்று நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்குமாறு தென்னாப்பிரிக்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி (Gayton McKenzie) அழைப்பு விடுத்துள்ளார்.
தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான உரிமை மீறல் கட்டுப்பாடுகளின் காரணமாக இந்த அழைப்பினை அவர் விடுத்துள்ளார்.
முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இங்கிலாந்து அணி புறக்கணிக்க வேண்டும் என்று ஐக்கிய இராஜ்ஜியத்தின் 160 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திட் (ECB) கோரியிருந்தனர்.
எனினும், அந்த கோரிக்கையை ECB புறக்கணித்திருந்தது.
இந்த நிலையிலேயே, தென்னாப்பிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சரின் மேற்கண்ட அழைப்பு வந்துள்ளது.
அதேநேரம், அரசாங்கத்தின் தலையீட்டிற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நவம்பர் 2023 முதல் 2024 ஜனவரி வரை ஐசிசியால் இடைநிறுத்தப்பட்டதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.