பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாச்சாரத்தை உணர்த்தும் பண்டிகையாக விளங்குகிறது. சூரியனாக கருதப்படும் இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் இந்த பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையானது உழவர் திருநாளாக தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை உருவான கதை:
பொங்கல் பண்டிகையின் தோற்றமானது எப்போது உருவானது என்று சரியாக தெரியவில்லை என்றாலும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. இதற்கு என்ன பொருள் என்றால் ஆண்டினுடைய முதல் அறுவடை என்று அர்த்தமாம். உழவர்கள் தை மாதம் முதல் நாளில் அறுவடை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். பின்னர் இதுதான் பொங்கல் பண்டிகையாக மாறியது என்று கூறுகிறார்கள்.
பொங்கல் பண்டிகையானது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நாளாகும். பொங்கல் அன்று விவசாயிகள் தாங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியைஇ புதுப்பானையில் பொங்கலிட்டுஇ தோட்டத்தில் விளைந்த இஞ்சிஇ மஞ்சள்இ கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்துஇ நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.
ஒரு சிலர் பொங்கல் அன்று புதிய பானையிலோ அல்லது வழக்கம் மாறாமல் எப்போதும் வைக்கும் பொங்கல் பானையில் மஞ்சள் குங்குமம் இட்டுஇ பொங்கல் பானையின் கழுத்து பகுதியில் விளைந்த மஞ்சள் கொத்தினை கட்டி நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பார்கள்.
பால் பானையிலிருந்து பொங்கி வழியும் நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் உரைப்பார்கள். பொங்கல் தயார் செய்த பிறகு அவர்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு படைத்துவிட்டு தீபம் காட்டிய பிறகு அனைவருக்கும் கொடுத்துவிட்டு உண்பார்கள்.
பொங்கல் பொதுவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். முதல் நாளில் போகி பண்டிகையும் இரண்டாம் நாளில் பொங்கல் பண்டிகையும் மூன்றாம் நாள் பட்டிப்பொங்கல் அல்லது மாட்டுப்பொங்கலும் நான்காவது நாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
அதற்கமைய போகி பண்டிகை தினத்தன்று காலையிலேயே அனைவரும் குளித்து வீட்டில் இருக்கக்கூடிய தேவையில்லாத பொருள்களை வீட்டின் முன்பு எரித்து போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
பொங்கல் பண்டிகை – இந்த பண்டிகைக்கு சர்க்கரை பொங்கல் என்ற பெயரும் உள்ளது. புதுப்பானை எடுத்துஇ மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டிஇ புதுப் பாலில்இ புது அரிசியிட்டுஇ வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.
மாட்டு பொங்கல்: உழவர்களின் வாழ்வில் முக்கிய பங்காக இருப்பது கால்நடைகள். கிராமங்களில் மாட்டு பொங்கலானது மிக சிறப்பாக கொண்டாடப்படும். மாடுகள் இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்தி மாடுகளை குளிப்பாட்டி வண்ணம் பூசி உழவு கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்துஇ வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக பொங்கல் வைக்கபடுகிறது. மாட்டு பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
காணும் பொங்கல்: காணும் பொங்கல் அன்று பிரிந்த நண்பர்கள்இ உறவினர்களை சந்திக்கும் நாளாகும். பெண்கள் தங்களுடைய சகோதரின் நலனுக்காக படைப்பது காணும் பொங்கல். இந்த நான்காம் தின பொங்கலை கன்னி பொங்கல்இ கணு பொங்கல்இ காணும் பொங்கல் என்று அழைப்பார்கள்.
பொங்கல் விளையாட்டு:
பொங்கல் என்றாலே கிராமங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிறைய விளையாட்டு போட்டிகள் நடைபெறும். பொங்கல் நிகழ்ச்சிகள் அன்று
காலம் காலமாக கபடிஇ சிலம்பம்இ உறியடிஇ மாட்டு வண்டி பந்தயம்இ ஏறுதழுவுதல் பெண்களுக்கான சில போட்டிகளும் நடைப்பெறும்.
தமிழர்களின் திருநாளாக உழவர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையைஇ தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் அறிவித்துள்ளதால்இ தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை இரட்டிப்பு சந்தோஷத்துடன்இ தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கி அது நீங்காமல் இருக்க உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் எல்லா வளமும் நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம்.