அயர்லாந்து குடியரசின் பிரதமராக மைக்கேல் மார்ட்டின் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டமியற்றுபவர்கள் வியாழன் அன்று (24) 95 க்கு 76 என்ற விகிதத்தில் மைக்கேல் மார்ட்டின் தெரிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மார்ட்டின் சுயேச்சையான சட்டமியற்றுபவர்களுக்கு மேலதிகமாக இரண்டு பெரிய மத்திய-வலது கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்துவார்.
அவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்ப வாக்கெடுப்பு புதன்கிழமை குழப்பத்தில் முடிந்த பின்னர் அவரது நியமனம் ஒரு நாள் தாமதமானது.
உள்வரும் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சுயேச்சையான சட்டமியற்றுபவர்களுக்கு பேசும் உரிமைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது.
64 வயதான மார்ட்டின், இதற்கு முன்பு 2020 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார்.
கூட்டணி ஒப்பந்தத்தின்படி, பதவி விலகும் பிரதமர் சைமன் ஹாரிஸ் 2027 இல் மீண்டும் பிரதமராக பதவியேற்கும் வரை மார்ட்டின் அந்தப் பதவியில் இருப்பார்.