நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) இலங்கை மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை மக்கள் தமது தேசத்தின் சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில் ஐக்கிய அமெரிக்கா சார்பாக நான் வாழ்த்துகிறேன்.
இலங்கை சுதந்திரம் பெற்ற 77 வருடங்களில், எமது நாடுகள் வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் பங்காளித்துவத்தை உருவாக்கியுள்ளன மற்றும் ஜனநாயக விழுமியங்களின் பகிர்ந்து கொண்டுள்ளன.
வரும் ஆண்டில், இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த எங்கள் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்கும், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் எதிர்நோக்குகிறோம் – என்று குறிப்பிட்டுள்ளார்.