பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராப்’. இதில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. இந்த நிலையில், 21 ஆண்டுகள் கழித்து இப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட டிரெய்லரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
Very happy to unveil the Trailer of @CheranDirector's #Autograph ❤️❤️
My lovely wishes to you sir and the entire team for the Re-release 🤗@actress_Sneha #Gobika #Mallika #Kaniga #Rajesh @dop_ravivarman @vijaymilton #DwaRaghanath #SangiMahendra #Bharadhwaj #SabeshMurali… pic.twitter.com/ccHoW1Bhsc
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 19, 2025