பாதாள உலகக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த நபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய பெண்ணையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 72 மணித்தியாலங்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தககது.