சூடான் இராணுவ விமானம் ஒன்று செவ்வாயன்று (25) விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சூடானின் வடக்கு ஓம்டுர்மானில் உள்ள வாடி செய்ட்னா இராணுவ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் விமானம் விபத்துக்குள்ளானதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்தவர்களில் மேஜர் ஜெனரல் பஹ்ர் அகமட்டும் அடங்குவார்.
அவர் கார்ட்டூமின் ஒரு மூத்த தளபதி ஆவார், அவர் முன்பு தலைநகர் முழுவதும் இராணுவத்தின் தளபதியாக பணியாற்றினார்.
விபத்து குறித்து செவ்வாயன்று ஒரு அறிக்கையில் சூடன் இராணுவம், விபத்தில் இராணுவ வீரரகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறியது.
ஆனால், மேலதிக விபரத்தை வழங்கவில்லை.