2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் குழு பி பிரிவில் புதன்கிழமை (26) நடைபெறும் போட்டியில் இங்கலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
அதன்படி, இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 02.30 மணிக்கு லாகூரில் அமைந்துள்ள கடாபி மைதானத்தில் ஆரம்பமாகும்.
இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தொடரின் தொடக்க ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளன.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கான பந்தயத்தில் உயிர்ப்புடன் இருக்கும்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்த அணிகள் மோதும் நான்காவது சந்திப்பு இதுவாகும்.
அந்தப் போட்டிகளில் இங்கிலாந்து இரு முறையும், ஆப்கானிஸ்தான் ஒரு முறையும் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.