பிரதீப் ரங்கநாதனன் கதாநாயகனாக நடித்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்து, திரையரங்களுகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
இந் நிலையில் எப்போதும் நல்ல படம் வந்தால் அந்தப் படத்தின் இயக்குநரை அழைத்து பாராட்டும் ரஜினிகாந்த், டிராகன் படத்தின் இயக்குநர் அஷ்வத்தையும் தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டியிருக்கிறார்.
மேலும் என்ன ரைட்டிங் அஷ்வத், ஃபென்ட்டாஸ்டிக் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் தனது எக்ஸ் தளத்தில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “நல்ல படம் பண்ணனும், படத்தை பார்த்துவிட்டு ரஜினி வீட்டுக்கு கூப்பிட்டு வாழ்த்தி நம்முடைய படத்தை பற்றி பேசவேண்டும். இது இயக்குநர் ஆகணும்னு கஷ்டப்பட்டு உழைக்கும் ஒவ்வொரு உதவி இயக்குநரின் கனவு. அந்த கனவு நிறைவேறிய நாள் இன்று” என குறிப்பிட்டிருக்கிறார்.