சர்ச்சைக்குரிய இலங்கை மதப் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ (Jerome Fernando) மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (05) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் வாக்குமூலம் அளித்த பிறகு, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ 2023 டிசம்பரில் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்டார்.
2023 மோ மாத்தில் நிரம்பியிருந்த ஒரு சபைக்கு முன்னால் பெளத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் இந்தப் போதகர் இலங்கை காவல்துறையினரால் தேடப்பட்டார்.
அவரது கருத்துகளின் வீடியோக் காட்சிகள் நாட்டில் உள்ள புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு பல மன்னிப்புகளை வெளியிட்டார்.
சம்பவம் நடந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வெளிநாட்டில் இருந்த பின்னர் அவர் இலங்கைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.