யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மருதடி வீதியை சேர்ந்த , வசந்தன் (வயது 41) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், இவர் குடும்பப் பிரச்சனை காரணமாக தனிமையில் வசித்து வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.