வடக்கின் பெரும் சமர் எனப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் போட்டி இன்றாகும்.
நேற்றைய தினம் இரண்டாம் நாள் போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆட்ட நேர முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் உள்ளது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி சகல விக்கட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அதேநேரம் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சகல விக்கட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.