முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்லவில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்குச் சொந்தமான காணியில் இருந்து T56 துப்பாக்கி, இரண்டு மகசின்கள், 130 தோட்டாக்கள், 12 போர் துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களை பொலிஸார் கண்டுபிடித்ததை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அந்தப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மேல் மாகாண (வடக்கு) குற்றப்பிரிவு பணிப்பாளர் தலைமையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.