பயங்கரவாத தடைச் சட்டம் ( PTA) மற்றும் மருந்துகள், அத்தியாவசிய உணவு, மற்றும் பாடசாலைப் பொருட்களுக்கான வரிக்குறைப்பு (VAT) உள்ளிட்டவற்றை வாக்குறுதி அளித்தபடி அனுர அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுப் பாதையில் கையொப்பம் என்னும் போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்றலில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கையெழுத்து போராட்டம் அரசின் பொய்களையும் இயலாமையையும் வெளிக்கொணரும் ஒன்றாக இருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.