ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (ACB) உறுப்பினர் பதவியை இடைநிறுத்துமாறு சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் (ICC) மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷாவுக்கு அனுப்பிய கடிதத்தில், தாலிபான்களால் ஆட்சி செய்யப்படும் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் கல்வி கற்கவும் விளையாட்டுகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படும் வரை சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதை தடை செய்ய வேண்டும் என்று HRW வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான மின்னஞ்சல் பெப்ரவரி 03 ஆம் திகதி ஜெய் ஷாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அது மார்ச் 07 ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது.
2021 ஆகஸ்ட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தாலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடுமையான விதிகளை பிறப்பித்துள்ளனர்.
இதில் கருத்து சுதந்திரம் மற்றும் இயக்க சுதந்திரம், பல வகையான வேலைவாய்ப்பு மற்றும் ஆறாம் வகுப்புக்கு அப்பால் கல்வி கற்கும் சுதநதிரம் ஆகியவை அடங்கும்.
இவை வாழ்க்கை, வாழ்வாதாரம், தங்குமிடம், சுகாதாரப் பாதுகாப்பு, உணவு மற்றும் தண்ணீர் உட்பட அவர்களின் அனைத்து உரிமைகளையும் பாதிக்கின்றன.
2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கான பணம் நிறுத்தப்பட்டிருந்தாலும், நாட்டின் ஆண்கள் அணி தொடர்ந்து நிதி மற்றும் தளவாட ஆதரவைப் பெறுகிறது.
இது ஐ.சி.சி.யின் சொந்த பாகுபாடு எதிர்ப்பு விதிகளுக்கு முரணானது என்றும் அந்த மின்னஞ்சலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.