மாத்தளை நகரிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தல்கள் தொடர்பில் மாத்தளை பொலிசார் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளனர்.
மாத்தளை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நாளை 12ம் திகதி காலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
திருவிழா இடம்பெறும் காலப்பகுதியில் மாத்தளை நகரின் ஊடாக தம்புள்ளையிலிருந்து கண்டி நோக்கியும் கண்டியிலிருந்து தம்புள்ளை வரையிலும் பயணிக்கும் சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.
மாற்று வீதிகள் தொடர்பில் பொலிசார் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் , இன்றைய தினம் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 22ஆம் நாள் மகோற்சவ பூஜைகள் இன்று நடைபெற்றது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் காவடி , தீ மிதிப்பு என்பன இடம்பெற்றிருந்தன.