எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து டி20 அணிக்கு சகலதுறை வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டாம் இடம்பிடித்த நியூஸிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த ஏழு பேர் இந்த தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்று எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்தத் தொடர் நியூசிலாந்து தலைவராக பிரேஸ்வெல்லின் இரண்டாவது தொடரைக் குறிக்கும்.
அவர் 2024 ஏப்ரலில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது அணியை வழிநடத்தியிருந்தார்.
இந்தத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில், தொடை தசைநார் காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான அண்மைய உள்நாட்டுத் தொடரைத் தவறவிட்ட இஷ் சோதி ஆகியோர் அடங்குவர்.
சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை தேர்வாளர்கள் நிர்வகிக்கும் நிலையில், கைல் ஜேமிசன் மற்றும் வில் ஓ’ரூர்க் ஆகியோர் முதல் மூன்று ஆட்டங்களுக்கு மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.