பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக மொரிஷியசுக்கு சென்றார். மொரிஷியஸ் பிரதமர் Navin Ramgoolam அழைப்பு விடுத்ததன் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்
பிரதமர் மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உரையாற்றினார். இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் அந்நாட்டு ஜனாதிபதியையும் சந்தித்து பேசினார்.
இதற்கிடையே, மொரிஷியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பிரதமர் மோடிக்கு The Great Commander of the Order of the Star and Key of the Indian Ocean என்ற மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
அதன்பின், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்நிலையில், மொரிஷியஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு போர்ட் லூயிஸ் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.