மேற்கு, சப்ரகமுவ, மத்தி, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் சில இடங்களில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக கடும் காற்றினால் மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வதற்கு அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.