மியாமி ஓபனின் முதல் சுற்றில் யூலியா ஸ்டாரோடுப்ட்சேவாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் உலக நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா வெற்றி பெற்றுள்ளார்.
இந்த ஆட்டத்தில், ஒசாகா ஒரு செட்டில் தோல்வியடைந்த பின்னர் உக்ரேனின் ஸ்டாரோடுப்ட்சேவாவை 3-6 6-4 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
ஜனவரியில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் இரண்டாவது சுற்றுக்குப் பின்னர் ஜப்பானிய வீராங்கனை பெற்று முதல் வெற்றி இதுவாகும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தியன் வெல்ஸில் கமிலா ஒசோரியோவிடம் தனது முதல் சுற்றில் தோல்வி “என் வாழ்க்கையில் நான் விளையாடிய மிக மோசமான போட்டி” என்று ஒசாகா விவரித்ததை அடுத்து இந்த வெற்றி வந்துள்ளது.
நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற இவர், தனது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும், மகப்பேறு விடுமுறைக்காகவும் விளையாடுவதிலிருந்து பல இடைவெளிகளைப் பெற்றுள்ளார்.
2021 அவுஸ்திரேலிய ஓபனில் அவர் வென்றதிலிருந்து, அவர் எந்த ஒரு முக்கிய போட்டியிலும் மூன்றாவது சுற்றைத் தாண்டி முன்னேறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.