ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (01)அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சார உற்பத்தி நிறுவனமான NTPC-யால் இயக்கப்படும் இரண்டு ரயில்களுக்கு இடையேயான மோதல், இன்று அதிகாலை 3:00 மணியளவில் பர்ஹைட் பொலிஸ் நிலையப் பகுதியில் உள்ள போக்னாதி அருகே இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்த தண்டவாளங்களும் NTPC-க்குச் சொந்தமானவை, மேலும் அவை முக்கியமாக அதன் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டு சரக்கு ரயில்களின் சாரதிகளும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த பாதை பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள NTPC-யின் கஹல்கான் சூப்பர் அனல் மின் நிலையத்தையும் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபராக்கா மின் நிலையத்தையும் இணைக்கிறது.