‘பேட்மேன் ஃபாரெவர்’ படத்தில் புரூஸ் வெய்னாகவும், ‘தி டோர்ஸ்’ படத்தில் ஜிம் மோரிசனாகவும் நடித்து புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகர் வால் கில்மர் (Val Kilmer) செவ்வாய்க்கிழமை (01) லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 65.
நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அவரது மகள் மெர்சிடிஸ் கில்மர் உறுதிபடுத்தியுள்ளார்.
மேலும், நடிகருக்கு 2014 ஆம் ஆண்டில் தொண்டைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால், அவர் குணமடைந்துவிட்டார் என்றும் அவர் தி நியூயோர்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.
கில்மருக்கு அவரது மகள் மெர்சிடிஸ் மற்றும் மகன் ஜாக் உள்ளனர்.
1991 ஆம் ஆண்டு வெளியான ஆலிவர் ஸ்டோனின் ‘தி டோர்ஸ்’ படத்தில் பாடகர் மோரிசனாக தனது வாழ்க்கையில் மறக்கமுடியாத வேடங்களில் ஒன்றை அவர் நடித்தார்.
1995 ஆம் ஆண்டு வெளியான ‘பேட்மேன் ஃபாரெவர்’ படத்தில் மைக்கேல் கீட்டனுக்குப் பதிலாக நடித்தார்.
இருப்பினும், அவரது நடிப்பிற்காக கலவையான விமர்சனங்களைப் பெற்றார்.
பின்னர் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘பேட்மேன் அண்ட் ராபின்’ படத்தில் ஜார்ஜ் குளூனி அவருக்குப் பதிலாக நடித்தமையும் குறிப்பிடத்தக்கது.