2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்று (02) நடைபெறும் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியானது, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 14 ஆவது போட்டினாது இன்றிரவு 07.30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளும் தத்தமது கடைசி போட்டிகளில் வெற்றி பெற்று இன்றைய ஆட்டத்திற்கு வருகின்றன.
இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பெங்களூரு அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது.
தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை (KKR) வீழ்த்திய அவர்கள், பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (CSK) வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தனர்.
மறுபுறம், குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸிடம் (PBKS) 244 ஓட்ட இலக்கை துரத்த முடியாமல் தோல்வியடைந்தது.
ஆனால், இரண்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை (MI) வீழ்த்தி அற்புதமான மீட்சியைப் பெற்றது.
இந்த சீசனில் பட்டீதரின் கீழ் பெங்களூரு அணி மிகவும் உறுதியான மற்றும் திறமையான அணியாகத் தெரிகிறது.
ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் என மிகவும் தந்திரமாக செயல்படக்கூடிய இரண்டு உலகத் தரம் வாய்ந்த பவர்பிளே பந்து வீச்சாளர்கள் அவர்களிடம் உள்ளனர்.
அதேநேரம், அவர்களில் முன்னணி துடுப்பாட்ட வரிசையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தப் போட்டிக்காக RCB அணி மாறாமல் இருக்க வாய்ப்புள்ளது.
அதேநேரம், மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் GT சிறப்பாக செயற்பட்டனர். அவர்களின் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சனும் கில்லும் நல்ல நிலையில் இருந்தனர்.
2023 சீசன் பட்டத்தை வென்றவர்கள் RCB அணிக்கு எதிராக பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
குஜராத் அணியும் அணியுடன் மாற்றம் காணாமல் இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.
இரு அணிகளிலும் தங்கள் அணிகளுக்காக களமிறங்கக்கூடிய பல நட்சத்திரங்கள் இருப்பதால், வரவிருக்கும் போட்டி ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான மோதலாக அமைகிறது.
ஐ.பி.எல். அரங்கில் இதுவரை இரு அணிகளும் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில், RCB மூன்றில் வெற்றிகளையும், GT இரண்டு வெற்றிகளையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.