ஜப்பானின் கியூஷுவில் அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (02) இரவு 07.34 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
உயிர் மற்றும் சொத்து இழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளில் உணரப்பட்டன.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல இடிந்து விழுந்தன.
சாலைகள் விரிசல் அடைந்தன,நிலநடுக்கத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், நிலநடுக்க நிவாரண முயற்சிகளை அனுமதிக்க மியான்மரின் ஆளும் இராணுவம் ஏப்ரல் 22 வரை நாட்டின் உள்நாட்டுப் போரில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
ஜப்பானைப் பொறுத்தவரை, அந்நாடு அதிக நில அதிர்வு மண்டலத்தில் உள்ளது.
மேலும் பசுபிக் கடற்கரையில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தும், நூற்றுக்கணக்கான கட்டிடங்களை இடிந்து விழும் மற்றும் சுமார் 300,000 மக்களைக் கொல்லக்கூடும் என்று ஜப்பான் அரசாங்க அறிக்கை திங்களன்று தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
















