ஏப்ரல் 7 ஆம் திகதி வான்கடே மைதானத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.
ஆனால் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற வாய்ப்பில்லை.
இதனால் அவர் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் உள்ளது.
முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பும்ரா பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் மறுவாழ்வு பெற்று வந்தார்.
2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல்.லில் அறிமுகமானதிலிருந்து அவர் மும்பை அணியின் பந்துவீச்சுத் தாக்குதலில் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறார்.
பல ஆண்டுகளாக, அவர் அந்த அணிக்காக 133 போட்டிகளில் விளையாடி 165 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முதுகுவலி காரணமாக அவர் தவறவிட்ட ஒரே சீசன் 2023 ஆகும்.
ஜனவரி 4 ஆம் திகதி சிட்னியில் நடந்த இறுதி பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்டின் இரண்டாவது நாளின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதன் விளைவாக, கடந்த மாதம் இந்தியா வென்ற சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
2023 மார்ச் மாதம் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது முதுகில் ஏற்பட்ட முதல் பின்னடைவு இதுவாகும்.
கடந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி பும்ராவை 18 கோடி இந்திய ரூபாவுக்கு தக்க வைத்துக் கொண்டது.
அதன் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
மும்பை அணி தற்போது நான்கு போட்டிகளில் இருந்து ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.