உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைச் செயல்கள், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் மேலும் 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாடுகள் நேற்று (06) கிடைக்கப்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர மத்துகம, பதுரலிய, அளுத்கம, களுத்துறை தெற்கு, முல்லேரியா, களனி, ராகம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.