”பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தங்கச்சி மடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று உரையாற்றிய போதே மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ”கட்சதீவை மீட்க வேண்டும் எனவும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தாம் வலியுறுத்தியிருந்ததாகவும், ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை; எனவும் இது வேதனை அளிக்கிறது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் எனவும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது எனவும் தெரிவித்த முதலமைச்சர், இலங்கை சிறையில் உள்ள 97 மீனவர்களை விடுவிக்க பிரதமர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ”தமிழர் நலனுக்கு தொடர்பில்லாத வகையில் பிரதமரின் இலங்கை பயணம் அமைந்துள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விட்டாலும் தமிழக அரசு மீனவர்களுக்கு துணை நிற்கும் என்று கூறினார்.