இங்கிலாந்து அணியின் (ஒருநாள், ‘டி-20’) தலைவராக பட்லர் இருந்தார். பாகிஸ்தான், துபாயில் நடந்த ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதனையடுத்து அணித்தலைவர் பதவியிலிருந்து பட்லர் விலகினார். இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள், ‘டி-20’ அணிகளுக்கு புதிய அணித்தலைவராக 26 வயதான ஹரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர், துணைக் தலைவரான செயற்பட்டிருந்தார். கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பட்லர் விலகியதால்இ,ங்கிலாந்து அணியை வழிநடத்தினார் புரூக். இதுவரை 24 டெஸ்ட், 26 ஒருநாள், 44 சர்வதேச ‘டி-20’ போட்டியில் விளையாடி உள்ளார்.
இந்தியன் பிரிமியர் கிரிக்கெட் 18வது பருவகால ஏலத்தில் டில்லி அணியில் ஒப்பந்தமான புரூக், கடைசி நேரத்தில் விலகியதால் அத்தொடரில் பங்கேற்க இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள புரூக் – இங்கிலாந்து அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டது மிகப் பெரிய கௌரவம். இளம் வயதில் கழக அணிக்காக விளையாடிய போது, இங்கிலாந்துக்காக விளையாடவும், அணியை வழிநடத்தவும் விரும்பினேன். நீண்ட நாள் கனவு நனவானது,” என்று தெரிவித்தார்.