சீதுவை பகுதியில் இன்று (08) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சீதுவை 18 கி.மீ. தூண் பகுதிக்கு அருகில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் தையல் இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும் கடையில் இருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் பாதிக்கப்பட்டவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.