இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நேற்று (08) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
மலையக மக்களுக்காக வழங்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தையும், மலையக பாடசாலைகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் வினைத்திறன் குறித்து மகிழ்ச்சியடைவதாக இந்திய உயர்ஸ்தானிகர் திரு.சந்தோஷ் ஜா தெரிவித்ததோடு, இந்த அரசாங்கம் மக்கள் அரசாங்கமாக பிரபல்யமடைந்துள்ளதாகவும் அதனால் தான் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தாம் நம்புவதாகவும் உயர்ஸ்தானிகர் சுட்டிகாட்டியுதுடன்
மலையக சமூகத்தினருக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10,000 வீடுகளின் முன்னேற்றம் மற்றும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளின் செயற்பாடுகள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.
கௌரவ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கைக்கான விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் K.V .சமந்த வித்தியாரத்தன , பிரதியமைச்சர் திரு.சுந்தர்லிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் திரு.பிரபாத் சந்திரகீர்த்தி, பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி சிவப்பிரகாசம் அமைச்சின் இணைப்புச் செயலாளர் வசந்தமூர்த்தி ஆகியோர்கள் உட்பட இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் அமைச்சின் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.