மொண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் டேனியல் அல்ட்மையர் உடன் பலப்பரீட்சை நடாத்தினார்.
குழுநிலைப்போட்டியின் கடைசி போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் அல்காரஸ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். முதல் செட்டில் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் மோதிக்கொண்டனர். இருந்தும் அல்காரஸ் சிறப்பாக செயற்பட்டு முதல் செட்டை வென்றெடுத்தார்.
பின்னர் இரண்டாவது செட் ஆட்டம் அவருக்கு போட்டியாக இருக்கவில்லை இலகுவாக டேனியல் அல்ட்மையரை வீழ்த்தி 6-1 என இலகுவாக நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.
இதேவேளை மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், போர்ச்சுகலின் நுனோ போர்ஜஸ் உடன் மோதினார். இதில் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்ற சிட்சிபாஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இரண்டு செட் ஆட்டங்களும் அவரின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததால் இலகுவாக வெற்றிப்பெற்று அசத்தினார்.
முதல் காலிறதிப்போட்டி இன்று பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் அதில் ஸ்பெய்னின் டேவிட்டோச்சுடன் அவுஸ்ரேலியாவின் போப்பிரின் மோதவுள்ளார். அதேவேளை பகல் 03.40 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது காலிறுதிப்போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பில்ஸ் மற்றும் ஸ்பெய்னில் அல்கராஸ் பலப்பரீட்சை நடாத்துகின்றனர்.
அதேவேளை 04.50க்கு ஆரம்பமாகும் 3வது காலிறுதிப் போட்டியில் பல்கேரியாவின் டிமித்ரோவ் எதிர் அவுஸ்ரேலியாவின் டி மினாருக்கிடையில் நடைபெறவுள்ளதுடன் கடைசி காலிறுதிப்போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 06 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் கிறீஸ் வீரர் சிட்சிபாஸ் இத்தாலியின் முசேட்டியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.