இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் பயணமாகவுள்ளது. அதேவேளையில் இருதரப்பு டி20 தொடரை பங்களாதேஷில் முதன்முறையாக இந்திய அணி விளையாட உள்ளது.
ஒருநாள் போட்டித் தொடரின் முதல் இரு போட்டிகள் மற்றும் டி 20 தொடரின் கடைசி இரு போட்டிகள் மிர்பூரிலும் 3-வது ஒருநாள் போட்டி மற்றும் முதல் டி 20 போட்டி சட்டோகிராமிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் 13-ம் திகதி டாக்கா புறப்பட்டுச் செல்கிறது.
ஆகஸ்ட் 17-ல் முதல் ஒருநாள் போட்டியும் 20-ம் திகதி 2-வது ஒருநாள் போட்டியும், கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி 23-ம் திகதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 26, 29 மற்றும் 31-ம் திகதிகளில் டி 20 தொடரிடன் போட்டிகள் யாவும் நடைபெறுகின்றன.