இலங்கை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காளியாக திகழும் எமது பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்கள் மாத்திரமன்றி தலைநகரிலும் தமது பொருளாதார வளர்ச்சிக்காக அர்ப்பனிக்கும் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்கள்.
இலங்கையின் சுதந்தரத்திற்கு பின்னரான வரலாற்றை எடுத்து நோக்கினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பங்களிப்பானது இன்றியமையாததாகவே காணப்படுகின்றது.
ஆகவேதான் நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமது முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துக்கள்.
ஜீவன் தொண்டமான் அவர்கள் தமது மே தின வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்து தெரிவிக்கையில்…
வர்க்கப் போராட்டங்களின் வரலாறு தான் மனிதகுல வரலாறு” என்கிறார் பேரறிவாளர் காரல் மார்க்ஸ். அந்த வகையில் தொழிலாளி வர்க்கம் 1886 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உழைக்கும் மக்கள் அமைப்புரீதியாக அணி திரண்டு வேலை நேரத்தை முறைப்படுத்தும் கோரிக்கைகளை முன் வைத்து மே முதல்நாள் ஊர்வலம் நடத்தியது. 8 மணிநேரம் உழைப்பு, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் என்பதாக வரையறுத்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
நாள்தோறும் 20 மணி நேரம் வரையிலும் வேலை வாங்கி வந்த, மூலதன சக்திகளும், அவர்களது அரசும், காவல்துறையும், கோரிக்கை வைத்து ஊர்வலம் போன தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. தொழிலாளர்களை அணிதிரட்டி முன்னணி தலைவர்களை தூக்கில் போட்டு, படுகொலை செய்தது.
இதன் இறுதி விளைவாக ஆண்டுதோரும் உலகலாவிய ரீதியில் மே 1 ஆம் திகதி மே தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களின் வெற்றிக்காக தொழிற்சங்க தலைவர் என்றவகையில் குரல் கொடுத்திருக்கின்றேன். தொடர்ந்து எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எனது குரல் ஒலிக்கும்.
இன்றைய மே தின நாளில் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.