டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சகல துறை ஆட்டக்காரர் தரவரிசையில் அதிக நாட்கள் முதல் இடத்தை தக்கவைத்தவர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜா சிறந்த சகல துறை ஆட்டக்காரராக கிரிக்கெட் ரசிகர்களால் போற்றப்படுகிறார்.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சகல துறை ஆட்டக்காரர் தரவரிசையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 1 ஆம் இடத்தை அலங்கரித்து வருகிறார். அவர் தொடர்ச்சியாக 1,151 நாட்கள் 1 ஆம் இடத்தை தக்கவைத்துள்ளார் .
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக நாட்கள் 1 ஆம் இடத்தைப் பிடித்த சகல துறை ஆட்டக்காரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.
இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 3,370 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு 323 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

















