தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சர்வதேச ரக்பி வீரர் கார்னல் ஹென்ட்ரிக்ஸ் (Cornal Hendricks) தனது 37 வயதில் மாரடைப்பால் காலமானார்.
ஸ்பிரிங்பாக்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் ஐந்து ட்ரைகள் அடித்த ஹென்ட்ரிக்ஸ் புதன்கிழமை (15) இறந்தார்.
2014 ஆம் ஆண்டு வேல்ஸுக்கு எதிரான ஸ்பிரிங்பாக்ஸ் அணிக்காக போட்டியில் இவர் அறிமுகமானார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் ஹென்ட்ரிக்ஸ் தொழில்முறை ரக்பியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனினும், இரண்டாவது மருத்துவ ஆலோசனையின் பின்னர், அவர் 2019 இல் பிரிட்டோரியாவை தளமாகக் கொண்ட சூப்பர் ரக்பி அணியான புல்ஸுடன் மீண்டும் விளையாடத் தொடங்கினார்.
அவர் 2011 மற்றும் 2014 க்கு இடையில் ரக்பி செவன்ஸில் தென்னாப்பிரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
2013 ரக்பி உலகக் கிண்ண செவன்ஸுக்கான பிளிட்ஸ்பாக்ஸுக்குத் தேர்வானார் மற்றும் 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
மொத்தத்தில், அவர் 17 ஆண்டுகள் நீடித்த தனது தொழில் வாழ்க்கையில் 233 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



















