• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
நிகழ்கால மாபியாக்களுக்கு சாட்டையடியாக “விலங்கு தெறிக்கும்”

நிகழ்கால மாபியாக்களுக்கு சாட்டையடியாக “விலங்கு தெறிக்கும்”

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/03
in சினிமா, பிரதான செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் கடந்த மார்ச் 14 ஆம் திகதி வெளியாகி மக்களின் ஆதரவைப் பெற்ற நம் நாட்டுக் கலைஞர்களின் “விலங்கு தெறிக்கும் ” திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும் திரையிடப்பட்டிருந்தது

Danyman production டனேஷ் ராஜ் இன் தயாரிப்பில் முல்லைத்தீவு மல்லாவிப் பிரதேசத்தை சேர்ந்த பிரகாஷ் ராஜாவின் கதை, திரைக்கதை,இயக்கத்திலும் உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ணபிள்ளை இசையமைத்திருக்கிறார்.

“விலங்கு தெறிக்கும் ” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர்களாக டருண் பாஸ்கர் மற்றும் அருள் செல்வம் ஒளிப்பதிவு செய்ய நூறிற்கு மேற்பட்ட நடிகர்கள் பட்டாளமே இதில் நடித்திருக்கிறார்கள்.

அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பத்திற்கான நடிப்பை சிறப்பாக செய்திருக்கும் அதேவேளையில் அனைவருமே அவர்களின் கதாப்பத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருந்தார்கள்.

திரைப்படத்தின் ஆரம்பமே முள்ளிவாய்க்கலில் இருந்து தொடங்குகிறது.

பெரிய திரைக்கதையை ஆரம்ப புள்ளியில் இருந்து சரியாக நகர்த்தும் யுக்தியை சிறப்பாக இயக்குநர் பிரகாஷ் ராஜா கையாண்டுள்ளர்.

அடுத்தடுத்து திரைக்கதை வேகமெடுக்க ஆரம்பிக்கிறது.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் வரும் கதாநாயகன் பின் திரைக்கதையில் கிட்டத்தட்ட 25 ஆவது நிமிடத்தில் மீண்டு வருகிறார் அதற்கிடையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நிகழ்கால பிரச்சனைகளை எடுத்து காட்டியிருக்கிறார்.

கதாநாயகனாக வரும் டனேஷ் ராஜ் உண்மையில் கதையின் நாயகனாக வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆரம்பத்தில் விறைப்பான முகத்தோடு வருபவர் பின் தன்னைச் சுற்றி என்னதான் நடக்கிறது என்பது தெரியாமல் பரிதவிக்கும் போதும் பின் அநியாயங்களை அழிக்கும் போதும் ஒரு கதையின் நாயகனாக இனியன் கதாப்பாத்திரத்தை பார்வையாளர்களோடு ஒன்றித்து பயணிக்க வைக்கிறார்.

அதே போல சக நடிகர்களும் சிறப்பாகவே நடித்திருந்தார்கள்.

திரைப்படத்தின் முற்பகுதியில் அமீர் கதாப்பாத்திரத்தில் வருபவர்கள் அவ்வப்போது வந்து பயமுறுத்துகிறார்.

அதே போல கதையின் நாயகியாக நடித்திருக்கும் கயல் விழி இதுதான் அவரின் முதல் திரைப்படமென்று தெரியாத அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் இன்னொரு பலம் அதன் பாடல்கள்.

தாரு, கனகேஷ்வரி சசிக்குமார் ,சசிக்குமார் சார்மிகா மற்றும் சந்தோசினி ஆகியோர் தங்களின் குரலால் படல்களுக்கு வலுச் சேர்த்திருக்க பாடல் வரிகளை ரொபின் ரொனால்ட், சாந்தகுமார் மற்று தாரு ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

முன்னர் கூறியதைப் போல இசையமைப்பாளர் தனக்கு கொடுக்கப்பட பணி மிக மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்.

அத்துடன் திரைப்படத்தின் எடிட்டர் தனுசன் செல்வராசாவும் Vfx & color grading செய்திருக்கும் நிவேன் சந்திரசேகர் சிறப்பாக தங்கள் பங்கிற்கு திரைப்படத்திற்கு வலுச்சேர்த்திருக்கிறார் .

அதேபோல திரைப்படத்தின் பிரதான வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஸ் நவரத்தின ராஜாவும் தன் பங்கிற்கு நடிப்பில் மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறார்.

கடந்த வாரம் இந்த திரைப்படம் கொழும்பில் சங்கவி பிலிம்ஸ் ஏற்பாட்டில் மருதானை சினி சிட்டி திரையரங்கில் திரையிடப்பட்டு கொழும்பு வாழ் மக்களினதும் ஆதரவை பெற்றிருந்தது.

இதில் கொழும்பைச் சேர்ந்த ஜனா, ஆர்.டி.கே, பிரேம்ஜித், நிசான் ஆர்கே, ராம்வேல் போன்றவர்களும் நடித்திருந்தார்கள் .

“விலங்கு தெறிக்கும் ” உண்மையில் அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமென்றால் நிகழ்கால மாபியாக்களுக்கு ஒரு சாட்டையடி “விலங்கு தெறிக்கும் ”

எதிர்வரும் நாட்களில் இத் திரைப்படம் இலங்கை முழுவதும் திரையரங்குகளில் ஒரேநேரத்தில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: Vilangu Therikkumதிரைப்படம்விலங்கு தெறிக்கும்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம்!

Next Post

பகிடிவதையால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி!

Related Posts

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

2026-03-13
ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு
சினிமா

ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு

2026-03-13
ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!
இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

2026-03-12
ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !
இலங்கை

ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

2026-03-12
Next Post
யாழ்.பல்கலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் நுழையத் தடை – விடுதியில் இருந்தும் வெளியேற்றம்

பகிடிவதையால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி!

மே மாத்தில் உச்சம் தொட்ட சுற்றுலா பயணிகளின் வருகை!

மே மாத்தில் உச்சம் தொட்ட சுற்றுலா பயணிகளின் வருகை!

மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!

மகாவலி நில விநியோகம் குறித்து அரசாங்கம் விசாரணை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

0
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

0
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

0
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

0
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.