2025 மே மாதத்தில் இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, 2025 மே மாதத்தில் 132,919 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் கூறியுள்ளது.
இது 2018 மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 129,466 சுற்றுலா பயணிகளின் வருகை சாதனையை முறியடித்துள்ளது.
மே மாதத்தில் வருகை 2024 ஆம் ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 18.5% அதிகரிப்பாகும்.
மேலும், 2018 மே 2018 மாதத்துடன் ஒப்பிடும் போது 2.7% அதிகரித்துள்ளது,
இது சுற்றுலாத் துறையில் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
இலங்கை வரும் சுற்றுலா பயணிகளில் இந்தியா மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
அதன்படி, 2025 மே மாத்தில் அங்கிருந்து 47,001 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இது மொத்தத்தில் 35.4% ஆகும்.
அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், சீனா, பங்களாதேஷ் மற்றும் ஜெர்மனி ஆகியவை முக்கிய இடங்களாக உள்ளன.