ஜம்மு காஷ்மீரில், செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரெயில்வே பாலத்தினை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 2 நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது.
ஆனால் அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பியுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் குறித்த பாலத்தினை திறந்து வைத்தார். குறித்தபாலமானது நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் இந்த பாலத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.