பெங்களூருவில் நடைபெற்ற வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்ததையும், காயமடைந்ததையும் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கடுமையான நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறது.
இதனால், 2026 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் இந்திய ஊடகங்கள் ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.
2025 ஐ.பி.எல். பட்டத்தை வென்ற பிறகு, எம் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே RCB அணிக்கு வெற்றி அணிவகுப்பு மற்றும் பிரமாண்ட கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்கிடையில், மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் 11 பேர் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதன் பின்னர், RCB அணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் இரண்டு அதிகாரிகளும் இராஜினாமா செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவை அனைத்திற்கும் நடுவில் RCB அணி சிக்கியுள்ளது.
இந்த விடயத்திற்குப் பின்னர், 2026 ஐ.பி.எல். சீசனில் RCB பங்கேற்பது குறித்து BCCI விரைவில் ஒரு பெரிய முடிவை எடுக்கலாம்.
















