ஹொங்கொங்கிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக விமானி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை வந்தது.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான AI315, திங்கள்கிழமை (16) காலை ஹொங்கொங்கிலிருந்து புறப்பட்டு டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்தப் பிரச்சினை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர், நிலையான பாதுகாப்பு நெறிமுறையின்படி, விமானி புறப்பட்ட இடத்திற்குத் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விமானத்திலிருந்து அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பயணிகளை அவர்களின் இலக்கான டெல்லிக்கு விரைவில் கொண்டு செல்ல மாற்று ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
எனினும், தொழில்நுட்பக் கோளாறின் தன்மை அல்லது விமானத்தின் கால அட்டவணையை மாற்றியமைத்தல் குறித்து ஏர் இந்தியா இன்னும் பொது அறிக்கையை வெளியிடவில்லை.