இன்று நள்ளிரவு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பொது முகாமையாளருடன் இன்று நடந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நள்ளிரவு முதல் 48 மணி நேர தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது.
நீண்டகாலமாக தீர்க்கப்படாத நிர்வாகப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு வேலைநிறுத்தம் நடத்தப்படவுள்ளதாகக் கூறிய சங்கம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்தப் பிரச்சினைகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.