அமெரிக்க சமையல் உலகில் பெருமைமிகு ஜேம்ஸ் பியர்ட் (James Beard) விருதை, மதுரை அரசம்பட்டியைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஜயகுமார் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில், கிரீன்விச்சில் உள்ள ”செம்மா ”என்ற தென்னிந்திய உணவகத்தை நடத்தி வரும் விஜயகுமார், நியூயோர்க்கின் சிறந்த சமையல் கலைஞர் என்ற விருதைப் பெற்றுள்ளார்.
பொறியியல் கற்பதற்கு பணம் இல்லாததால் செஃப் ஆனதாகவும், இத்துறையினை தெரிவு செய்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்த பெருமைமிகு விருதைப் பெற முடியும் எனத் தான் நினைத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மா உணவகத்தில், திண்டுக்கல் பிரியாணி, நத்தை பிரட்டல், இறால் தொக்கு, நரிவால் தினை கிச்சடி போன்றவை பிரபலமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

















