முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் தங்களது பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததை தொடர்ந்து, அவர்களை விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டது.
கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர், ஆனால் அவர்களின் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதற்காக மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அதன்படி, இன்று அவர்களின் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர், அவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.