தெஹிவளை வைத்தியா வீதியில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு நேற்று (05) ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு துப்பாக்கியை மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.












